search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீன ஆட்சிக்கு எதிர்ப்பு"

    திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார்.
    பீஜிங்:

    திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து தீக்குளிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. திபெத் விடுதலைக்காக ஏராளமான புத்த மத துறவிகளும் உயிரை மாய்த்துள்ளனர்.

    இந்நிலையில் பாரம்பரிய திபெத்திய பிராந்தியமான நகாபா கவுண்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது ஒரு திபெத்தியர் தீக்குளித்தார். அவர் பெயர் டோர்பே. அவர் தீக்குளிப்பதற்கு முன், தலாய் லாமா நாடு திரும்ப வேண்டும், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று முழக்கமிட்டுள்ளார். தீயில் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோர்பே, உயிரிழந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.



    2009ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் திபெத் விடுதலைப் போராட்டத்தில் இதுவரை துறவிகள் உள்ளிட்ட 154 திபெத்தியர்கள் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TibetanProtest #TibetanSelfImmolation

    ×